Life

AI-yo (ஐயோ))!

மாயமான் இன்று எனது நாள் சரியில்லை. இன்று எனது வங்கியிடமிருந்து (RBC) ஒரு கடிதம் வந்தது. திறந்து பார்த்தால் அதனுள் ஒரு தற்காலிக வங்கி அட்டையுடன் இணைப்புக்

Read More
Events

ரொறோண்டோ: இன்னுமொரு பெருவிழா திடீர் நிறுத்தம்!

மாநகரசபையின் இழுபறியே காரணம் கடந்த 40 வருடங்களாக ரொறோண்டோ வாழ் மக்களை மகிழ்வித்து வந்த AFROFEST என்னும் இசை நிகழ்ச்சியின் இவ்வருட நிகழ்வு நிறுத்தப்படுகிறது என திடீர்

Read More
Maintenance

ரொறோண்டோ வாடகைக் குடியிருப்பு: யார் பனி வழிப்பது?

இது குளிர்காலம். அடுத்த வருடம் ஏப்ரல் வரை பனிப்பொழிவிலிருந்து தப்ப முடியாது. சிறுவர்களுக்கு இது குதூகலத்தைத் தந்தாலும் முதியவர்களுக்கும் வாடகைக் குடியிருப்பாளர்களுக்கும் பனிப்பொழிவு சிம்ம சொப்பனம் தான்.

Read More
கனடா

டானியல் அமலதாஸ் கொலை: 17 வயது இளைஞர்கள் இருவர் கைது

ஆகஸ்ட் 21, 2025 அன்று ஸ்காபரோ நகர்மைய வளாகத்திலுள்ள கழிப்பறையொன்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சந்தேகத்துக்கிடமாக மரணமடைந்திருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட டானியல் அமலதாஸ் என்னும் இளைஞரின் மரணம்

Read More
HealthLife

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான வாழ்க்கைச் சூழலை உருவாக்குதல்

நிதி ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான வாழ்க்கைச் சூழலை வழங்குவதையும், அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அனைவரும் எளிதில் அணுகக்கூடிய இடங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்தல் (The Enhancing Access to Spaces for Everyone – EASE) திட்டத்திற்காக $2.2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை ஒன்ராறியோ மாகாண அரசு அறிவித்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக முதியோர் மற்றும் அணுகுமுறை அமைச்சரும் ஸ்காபரோ வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரேமண்ட் சோ (Raymond Cho)  கூறினார். அவர் மேலும் கருத்துரைக்கையில், “எளிதில் அணுகக்கூடிய இடங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்தல் (EASE) திட்டத்தின் மூலம், அதிக எண்ணிக்கையிலான முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் சுறுசுறுப்பாக பங்கேற்க உதவ விரும்புகிறோம். முதல்வர் டக் ஃபோர்டின் தலைமையில், ஒன்ராறியோ மாகாண அரசு அதிக உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஒன்ராறியோ மாகாண மக்களின் வாழ்க்கையை ஆரோக்கியமானதாகவும், சிறப்பானதாகவும் மாற்றும்” என்றார். EASE திட்டமானது மாநகராட்சிகள், இலாப நோக்கற்ற அமைப்புக்கள், பழங்குடி தன்னார்வ குழுக்கள் ஆகியவற்றுக்கு நிதியை வழங்கும். இதன்மூலம் மின்சார சக்கர நாற்காலி சார்ஜிங் நிலையங்கள், கடற்கரைகளில் சக்கர நாற்காலி செல்லக்கூடிய பாதை அமைத்தல், பூங்காக்களில் அணுகக்கூடிய கழிப்பறைகள் உள்ளிட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சமூக வாழ்வில் பங்கேற்க உதவும் பொது வசதிகளை உருவாக்க முடியும். முதியோரின் உடல், மன நலனை சிறப்பாகப் பாதுகாப்பதற்காக, ஒன்டாரியோ அரசு, அவர்களின் ஆரோக்கியமும் சமூக தொடர்பும் நிறைந்த வாழ்க்கையை ஊக்குவிக்கும் சமூக திட்டங்களில் ஈடுபடும் ‘முதியோருக்கான வாழ்வியல் மையங்களில்’  (Seniors Active

Read More
Immigration

நிரந்தர வதிவிடவுரிமை வழங்கலுக்கு முன்னுரிமை வழங்க கனடிய அரசு யோசனை

சுகாதாரப் பணியாளர், விசேட தொழில் திறனாளர்கள், கல்விப் பணியாளர் மற்றும் பிரஞ்சு மொழி பேசுபவர்களுக்கு நிரந்தர வதிவிடவுரிமை (Permanent Resdidency) வழங்கலுக்கு முன்னுரிமை வழங்குவதோடு அவர்களது விண்ணப்பங்களைத்

Read More
Events

ஒன்ராறியோ: அமைச்சர் சோவின் ஏற்பாட்டில் வெற்றிகரமாக நடைபெற்ற ஸ்காபரோ முதியோர் கண்காட்சி

‘சுறுசுறுப்பான வாழ்க்கை, ஆரோக்கியமான முதுமை’ என்ற தொனிப் பொருளில் 2025ஆம் ஆண்டு கொண்டாடப்படும் ‘ஒன்ராறியோ முதியோர் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் ஸ்காபரோ சட்டமன்ற உறுப்பினரும், முதியோர் விவகார, அணுகுமுறை அமைச்சருமான ரேமண்ட் சோ ஏற்பாடு செய்த முதலாம் ஆண்டு முதியோர் கண்காட்சி சீன கலாசார மண்டபத்தில் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு டொரண்டோ பெருநகரின் சீன கலாசார மையமும், ஸ்காபரோ வர்த்தக சங்கமும் இணை அனுசரணை வழங்கியிருந்தன. இதில் சுமார் 1000 முதியோர் பங்கேற்று பயன்பெற்றிருந்தனர். ஸ்காபரோவில் முதியோருக்கான சேவைகளை வழங்கும் 40 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமது காட்சிக்கூடங்களை அமைத்திருந்தன. குறிப்பாக கண், காது, உடல் பரிசோதனை உள்ளிட்ட  சுகாதார சேவைகளும் இங்கு இடம்பிடித்திருந்தன. மூத்த குடிமக்களின் சமநிலை, பாதுகாப்பு, சுயாதீனம் என்ற தலைப்பிலும் முதியோர் இல்லத்தைத் தேர்ந்தெடுக்கும்போது அறிய வேண்டிய விடயங்கள் என்ற தலைப்பிலும் கருத்தரங்குகள் நடைபெற்றன. அத்துடன் முதியோரை இலக்குவைத்து மோசடியாக பணம் திருடப்படுவதைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று RCMP பொலிசாரினால் வழங்கப்பட்டிருந்தது. இந்தக் கண்காட்சியில் தமிழ், சீன உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன. Frontline Community Centre அமைப்பைச் சேர்ந்த முதியோர் வழங்கிய தமிழ் பாரம்பரிய நடனமான கோலாட்டம், குழு யோகா, சீனர்களின் கலாசார நடனங்கள் உள்ளிட்ட  அம்சங்களும் நிகழ்வை வண்ணமயமாக்கின. இந்த நிகழ்வில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினரும், முதியோர் விவகார, அணுகுமுறை அமைச்சருமான ரேமண்ட் சோ, ‘இந்த சமூகத்தைக் கட்டமைத்த முதியோர் கொண்டாடப்பட வேண்டியவர்கள். முதியோரின் உழைப்பும் அனுபவமும் இன்றைய சமூகத்தை உருவாக்கியிருக்கிறது. அதனை கௌரவிக்கும் வகையில் ஒன்ராறியோ முதியோர் மாதத்தை கொண்டிக்கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்வை சிறப்பித்துக் கொண்டிருக்கும் முதியோருக்கான சேவைகளை வழங்கும் வர்த்தக நிறுவனங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள். இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு துணை நின்ற சீன கலாசார மையம், ஸ்காபரோ வர்த்தகச் சங்கம், தொண்டு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார். “எங்கள் மையத்தில் இந்த முக்கியமான நிகழ்வை இணைந்து நடத்துவதில் நாங்கள் பெருமைகொள்கிறோம்” என்று டொராண்டோ பெருநகரின் சீன கலாசார மையத்தின் தலைவர் ஆலன் லாம் கூறினார். “எங்கள் பல்நோக்கு மண்டபம் நிறைந்திருப்பதைப் பார்க்கும் போது உற்சாகமாக இருக்கிறது. இது வெறும் கண்காட்சியாக மட்டுல்லாமல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழவதற்கான வளங்களையும் அவர்களுக்குப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. நல்வாழ்வு, கற்றல் மற்றும் இணைப்புக்கான ஒரு சிறந்த இடமாக இது இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் சமூகம் ஒன்று சேர்ந்து ஒருவரையொருவர் மேம்படுத்தவும் ஆதரிக்கவும் உந்துசக்தியாக அமைகிறது.” “நாங்கள் முதியோர் மாதத்தைக் கொண்டாடும் இந்த வேளையில் ஸ்காபரோ வணிக சங்கம், இந்த கண்காட்சியில் ஒரு சமூக பங்காளியாக பங்கேற்பதில் பெருமை கொள்கிறது.” என்று ஸ்காபரோ வணிக சங்கத்தின் தலைவர் ரியான் சோமர் கூறினார். “இந்த நிகழ்வு நமது முதியோர்களுக்கு சேவை செய்யும் பணிகளை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், சமூக இணைப்பின் சக்தியையும் எடுத்துக்காட்டுகிறது. நமது முதியோரை ஆதரிப்பதும் அவர்களை பங்களிக்கச் செய்வதும் குடும்பங்களை வலுப்படுத்துவது மட்டுமன்றி உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பங்களிக்கிறது.” என்று தெரிவித்தார். கண்காட்சிக்கு வந்திருந்த முதியோருக்கு மதிய உணவு (இலகு)  வழங்கப்பட்டதுடன் கண்காட்சிக் கூடங்களில் முதியோர் தமக்குத் தேவையான தகவல்களையும் பெற்றுப் பயனடைந்தனர். ஊடகத் தொடர்பு  ஸ்காபரோ வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ரேமண்ட் சோ அலுவலகம்416-988-9314 | raymond.cho@pc.ola.org

Read More
Auto

ஒன்ராறியோ: முதியவர்கள் வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பதில் மாற்றங்கள்

ஜூலை 2025 நடைமுறைக்கு வருகிறது நீங்கள் வாகன ஓட்டுனராகவிருந்து [G அல்லது M வகையானவற்றுக்கு மற்றும் வணிக வாகனங்கள் (commercial licenses) வகைகள் A,B,C,D,E அல்லது F]

Read More
அறிவித்தல்கள்

G7 2025: இந்திய பரிவாரம் அழைக்கப்படக்கூடாது – சீக்கியர் கூட்டமைப்பு

அடுத்த மாதம் கனடாவில் நடைபெறவிருக்கும் G7 தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள கனடிய அரசு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருப்பதைக் கண்டிப்பதுடன் சீக்கிய செயற்பாட்டாளரின் கொலை தொடர்பில் நடைபெறும் விசாரணைகளுக்கு

Read More
Auto

கனடா: வாகன ஓட்டுனர்களுக்கான புதிய விதிகள்

ஜூலை 01, 2025 முதல் … கனடா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான வாகன ஓட்டுனர்களுக்கான புதிய விதிகள் ஜூலை 01, 2025 முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதுவரை நடைமுறையிலிருக்கும்

Read More